நெற்பயிரில், இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்த வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.கம்பம் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா சாகுபடியில் ஒரு சில இடங்களில், நெற்பயிரில் பாக்டீரியா, இலைக்கருகல் நோய் தென்படுகிறது. நோய் தாக்குதல் அறிகுறி குறித்தும், கட்டுப்படுத்தும் முறை குறித்தும் கம்பம் வேளான்மை உதவி இயக்குநர் அசோகன் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.பாக்டீரியா, இலைக்கருகல் நோய் அறிகுறிகள்:இலைகள் மஞ்சள் நிறமாக மாறி கருகியது போல தெரியும்.
இந்த அறிகுறி நாற்று நட்ட 3 முதல் 4 வாரங்களில் தோன்றும். இலைகருகல் அறிகுறியின் ஆரம்ப நிலையில் லேசான பச்சை நிறத்தில் நீர் கசிவுள்ள அல்லது மஞ்சள் நிற புள்ளிகள், இலையின் நுனி மற்றும் விளிம்புகளில் காணப்படும். இதனால் இலை நுனி மற்றும் விளிம்பு காய்ந்து காணப்படுகிறது. பாக்டீரியா, இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள்:
பரிந்துரை செய்யப்படும் யூரியாவை நான்கு முறையாக பிரித்து மேலுரமாக இடலாம். யூரியாவை ஜிப்சம் மற்றும் தூள் செய்த வேப்பம்பிண்ணாக்குடன் 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து ஒருநாள் வைத்திருந்து மறுநாள் மேல் உரமாக இடவேண்டும்.
பரிந்துரை செய்யப்படும் யூரியாவை நான்கு முறையாக பிரித்து மேலுரமாக இடலாம். யூரியாவை ஜிப்சம் மற்றும் தூள் செய்த வேப்பம்பிண்ணாக்குடன் 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து ஒருநாள் வைத்திருந்து மறுநாள் மேல் உரமாக இடவேண்டும்.
ஐந்து சதவித வேப்பங்கொட்டைச்சாறு அல்லது 3 சதவித வேப்பெண்ணெய் கரைசலை நோய் தோன்றும் தருணத்திலும், 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்கலாம். ஹெக்டருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் 300 கிராம் மற்றும் காப்பர் ஆக்சி குளோரைடு ஒரு கிலோ என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்
0 comments:
Post a Comment