மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்:-
*பசு மாட்டின் ஆண் இனம் காளை என்றும் அதன் குட்டி
கன்று என்றும் அழைக்கப்படுகிறது.
*பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால்
இறங்க முடியாது. ஏனென்றால் அதன் முழங்கால்
சரியாக வளைந்து கொடுக்காது.
*பசு மாடு முதன் முறை குட்டி ஈன்ற பிறகு தான் பால்
கொடுக்கும்.
*பசு மாடு தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 2 – 4 லட்சம்
லிட்டர் வரை பால் கொடுக்க வல்லது.
*ஒரு நாளில் 10 – 15 முறை கீழே உட்கார்ந்து
எழுந்திருக்கும்.
*சாதாரணமாக 500 கிலோ எடை உள்ள பசு மாடு
ஆண்டுக்கு சுமார் 10 டன் சாணியை கொடுக்கும்.
*ஒரு நாளில் 6 – 7 மணி நேரம் இரை உண்ணவும் 7 – 8
மணி நேரம் அதனை அசைபோடவும் பசுவுக்குத்
தேவை.
*அசை போடும் போது நிமிடத் திற்கு சுமார் 40 – 50
முறை தாடையை அசைக்க வேண் டி வருகிறது.
இப்படி ஒரு நாளைக்கு 40 ஆயிரத்திலி ருந்து 50
ஆயிரம் முறை தாடையை அசைக்கிறது.
*ஒரு பசு மாடு நாள் ஒன்றுக்கு 10 – 12 லிட்டர் சிறு
நீரும் 15 – 20 கிலோ சாணியும் வெளியேற்றுகிறது.
இன்னும் பெரிய
மாடாக இருந்தால் இது அதிகமாகும்.
*பசு மாடு ஒரு நாளில் சுமார் 100 லிட்டர் வரை தண்ணீர்
குடிக்க வல்லது.
*மாடு பற்களால் புல்லைக் கடிப்பதில்லை. நாக்கு
மற்றும் ஈற்றால் பிடுங்கிச் சாப்பிடுகின்றது.
*பசு மாட்டுக்கு ஒரு வயிறுதான் உண்டு. ஆனால்
அதில் உணவை ஜீரணிப்பதற்காக 4 பகுதிகள் உள்ளன.
*மாட்டின் கண்கள் முகத்தின் இருபுறமும்
அமைந்துள்ளதால் கிட்டத்தட்ட 4 பக்கமும் (360 டிகிரி
முழு வட்டம்) ஒரே சமயத்தில் பார்க்க வல்லது.
*பசு மாட்டின் நுகருணர்வு மிகவும் கூர்மையானது.
சுமார் 6 – 8 கி.மீ. தூரத்திலுள்ள பசுமையை நுகர்ந்து
கண்டு கொள்ளும்.
*கறக்கும் பசு மாடு நா ளுக்கு சுமார் 40 – 50 லிட்டர்
உமிழ் நீரை சுரந்து ஜீரணத்துக்கு பய ன்படுகிறது..
பசு மாட்டின் உடல் வெப்ப நிலை 101.5 டிகிரி
ஃபாரன்ஹீட்.
*உலகத்தில் உற்பத்தியாகும் மொத்த பாலில் 90 சதவீதம்
பசும்பால்.
*உலகத்திலேயே அதிகமாக பால் சுரந்த பெருமை
ஹோல்ஸ்டைன் இனத்தைச் சேர்ந்த மாட்
டைச் சேரும். அது ஒரு ஆண்டில் சுமார் 26,897 கிலோ
லிட்டர் பாலைச் சுரந்தது.
*ஒரே நாளில் 97 கிலோ பாலைச் சுரந்து உலகசாதனை
செய்த மாட்டின்பெயர் உர்பே ஆகும்.
இது வரை அதிக நாட்கள் வாழ்ந்த மாட்டின் வயது 48
ஆண்டுகள், 9 மாதங்கள் ஆகும்....!!!

Share on Google Plus

About Raghu Raja

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment