களைக்கொல்லி

சென்ற வருடம் இயற்கை களைக்கொல்லி மஞ்சள் நடவுசெய்த பூமிக்கு தெளித்த போது
கொஞ்சம் மனம் நெருடலாகத்தான் இருந்தது..

காரணம் மாட்டு கோமியத்துடன் நாம் உணவுக்கு பயன்படுத்தும் கல் உப்பை பயன்படுத்துகிறோம் என்று..

ஒரு சில நண்பர்கள் கல் உப்பை பயன்படுத்தாதீர்கள் மண் வளம் பாதிக்கும் என்று கூரினர்..

பத்து லிட்டர் சுத்தமான கோமியத்தில் ஒன்றரை கிலோ கல் உப்பை கரைத்து அதனுடன் அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து ஐம்பது மில்லி வேம்ப எண்ணெயுடன் கொஞ்சம் காதி சோப் கலந்து மஞ்சள்நடவு செய்து மூன்றாவது நாள் தெளித்தேன்..

கோரை, அருகு, சாரணையை தவிர மற்ற களைசெடிகள் கருகிவிட்டது..

இப்படி செய்ததால் கூலி ஆள் வைத்து கைக்களை எடுப்பது ஒன்றரை மாதம் தாமதமானது..

கணக்குபடி பார்த்தால் ஒரு ஏக்கருக்கு முப்பது பெண் ஆட்களை வைத்து களை எடுக்கும் செலவு கிட்டத்தட்ட எட்டாயிரம் ரூபாய் எனக்கு குறைந்தது..

அதே போல இந்த வருடமும் ஒரு சிறு மாற்றத்துடன் நடவு செய்த எழுபது சென்ட் பூமிக்கு இயற்கை களைக்கொல்லி தெளித்தாயிற்று..

சிறு மாற்றம் என்னவென்றால் சென்ற ஆண்டு ஒரு மாதம் ஆன கோமியம் தெளித்தேன் ஒன்ரை கிலோ கல் உப்பு கலந்து..
இந்த வருடம் ஆறு மாதங்கள் ஆன பழைய  கோமியத்தில் ஒரு கிலோ கல் உப்பு என்ற விகித்தில் தெளித்து இருக்கிறேன் ..

நன்றாகவே களை கருகுகிறது..

இந்த வருடம் நான் அனுப்பிய"ஏர் முனை " மஞ்சள் தூள் மனமாகவும், நல்ல நிறத்திலும் இருக்கிறது,
ஆனால் கடைகளில் வாங்கும் மஞ்சள்தூள் அப்படி இல்லையே என்று பலர் என்னை கேட்டனர்..

இதோ உங்களுக்காக சில தகவல்கள்..

சென்ற ஆண்டு நான் மஞ்சள் நடவு செய்த போது எனது உறவினரும் மஞ்சள் நடவு செய்தார்..

அவர் எந்த விதத்தில் மஞ்சள் நடவுசெய்து  எந்ததந்த முறைகளை கையாண்டார் என்று இதை படித்து பாருங்கள் அந்த மஞ்சள்ஏன் மனக்கவில்லை என்று உங்களுக்கே புரியும்..

உழவு ஓட்டும் போது ஏக்கருக்கு இரண்டு மூட்டை டி.ஏ.பி உரம் போட்டு,
நடவு செய்து மூன்றாவது நாள் "கோல் "எனும் ரசாயன களைக்கொல்லி தெளித்து,
மூன்று மாதங்களில்ஒரு கைக்களை எடுத்து
அடுத்த சில நாட்களில் ஏக்கருக்கு நான்கு மூட்டை டி.ஏ.பி,
நான்கு மூட்டை பொட்டாஷ்,
இரண்டு மூட்டை யூரியா,
பத்து கிலோ திம்மட்,
இரண்டு மூட்டை வேப்பம்பிண்ணாக்கு கலந்து மண் அணைத்து
அதன் பிறகு இலைப்புள்ளி நோயிற்க்கு மூன்று தண்ணி மருந்து தெளித்து,
தண்ணீர் பாய்ச்சும் போது ஏழாவது மாதத்தில் ஏக்கருக்கு இரண்டு மூட்டை பொட்டாஷ் கரைத்து விட்டு,
ஒன்பதாவது மாதத்தில் மஞ்சள் தாள் அறுத்து,
அதற்க்குள் களை வந்தால்
"ரௌன்டப் "தெளித்து,
பத்தாவது மாதத்தில் அறுவடை செய்து,
வேக வைத்து,
காயவைத்து,
காயும் போது மழை பெய்துவிட்டால் மஞ்சள் காயவைக்கும் களத்தில் களை வந்துவிடும்
அதை கொல்ல மீண்டும் ரௌன்டப் தெளித்து,
காய்ந்த பிறகு மஞ்சள் குலுக்கி
மூட்டை பிடித்து ஈரோடு மஞ்சள் மார்க்கெட் கொண்டு போனால் விலை இருக்காது ..

உடனே அதை அங்கேயே இருப்பு வைத்து
பூச்சி பிடிக்காமல் இருக்க மஞ்சள் மூட்டைகளுக்கு "செல்பாஸ் "மாத்திரை வைத்து விட்டு வீடு வந்தால்தான் ரசாயன விவசாயிக்கு நிம்மதி.!!

இதை எதுவுமே நான் செய்யாததால் ஒருமாதம் அறுவடைக்கு தாமதமானாலும்
நஞ்சில்லா மஞ்சள் மனக்கிறது என்பதை மற்றவர்கள் சொல்லும் போது மனதிற்க்கு ஆத்மதிருப்த்தி..

"நான் தேங்காய் எண்ணெய் உங்க கிட்ட வாங்கினேன்,
ஏர் முனை என்ற பெயர் பாட்டிலில் எடுப்பாக இல்லை ங்க,
அதனால் ஸ்டிக்கரோட கலரை இன்னும் "டார்க்கா "மாத்துங்க என்றார் ஒரு நண்பர்..

அதற்கு நான் "பெயர் டார்க்கா இல்லைனா பரவாயில்லை ங்க எண்ணெயில் ஏதாவது குறை இருந்தா சொல்லுங்க "என்றேன்..

அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை ங்க நல்லாத்தான் இருக்கு என்று சொல்லிவிட்டு எனக்கு தேவையான பொருட்களை கடைகளுக்கு சென்று வாங்கும் போது அது எப்படி நல்லது என்று நான் தெரிந்துகொள்வது" என்று கேட்டார்.

அதற்கு நான் "காலையிலிருந்து மாலை வரை தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களை ஒன்று விடாமல் பார்த்து ஒரு நோட்டில் குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்,
எந்தெந்த பொருட்கள் தொலைக்காட்சி விளம்பரத்தில் வரவில்லையோ அதை வாங்கி பயன்படுத்துங்கள் அது நல்லா இருக்கும் "என்றேன்..!!

அதுவும் உண்மைதா ங்க என்று சொல்லி இணைப்பை துண்டித்துவிட்டார்..

"ஒருத்தனை ஏமாத்தனும்னா அவனோட ஆசையை தூண்டிவிட்டுட்டா போதும்" என்பதை நன்றாக புரிந்து நம் மக்களை நம்பவைத்து ஏமாற்றுகிறது நம் ஊடகங்கள்..

எனது வலைபக்க முகவரி
www.Yermunai.com

Share on Google Plus

About Raghu Raja

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment